|
| நீரிழிவால் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு : ஆய்வு |
| வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஜூலை 2008 ( 11:54 IST ) | |
சாதாரண நபர்களைக் காட்டிலும், நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் மும்மடங்காகவுள்ளது என மருத்துவ பகுப்பாய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சர்க்கரை நோய் என்றழைக்கப்படும் நீரிழிவு நோய்க்கும், டி.பி. எனப்படும் காசநோய்க்கும் இடையேயான தொடர்பு பற்றி, பாஸ்டனிலுள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வை மேற்கொண்டனர்.
அமெரிக்கா, மெக்சிகோ, பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, தைவான் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் காசநோய் பாதிப்புள்ள 17,698 பேர் உள்பட மொத்தம் 17 லட்சம் பேரிடம் கடந்த 40 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆய்வுகள் பகுத்தாயப்பட்டுள்ளன.
இதில், நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு காசநோய் வருவதற்கான சாத்தியம் மூன்று மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
காசநோய் பாதிப்பு மிகுந்துள்ள இந்தியாவிலும் சீனாவிலும் 10 சதவிகித காசநோய் பாதிப்புக்கு நீரிழிவு நோயே காரணமாகவுள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுப்பாய்வின் முடிவுகள், பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
"உலக நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் மீது செலுத்தப்படும் கவனத்தை சற்று கூடுதலாக்கினால், காசநோய் பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும்," என மருத்துவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, ஆண்டுதோறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புதிதாக காசநோய் பாதிப்புக்குள்ளாகும் 30 லட்சம் பேரில் 22 சதவிகிதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|