|
| எய்ட்ஸுக்கு சித்த மருத்துவம் : ஆராய்ச்சி குழு அமைப்பு |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜூலை 2008 ( 16:43 IST ) | |
சித்த மருந்துகள் மூலம் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து அறிவியல்ரீதியாக ஆராய்ச்சி செய்வதற்கு மாநில அளவிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
ஆராய்ச்சிக் குழு அமைப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, சுகாதாரத் துறைச்செயலர் வி.கு.சுப்புராஜ் தலைமையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் தலைவர் சுப்ரியா சாகு, இந்திய மருத்துவத் துறை ஆணையர் ராஜ்குமார் அம்பேத்கர் உள்பட 12 பேரைக் கொண்ட மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்த மருந்துகளுக்கு உள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தாலும்கூட, உலக அளவில் இதை நிரூபிக்க வேண்டுமானால், மருந்துகளின் தர நிர்ணயம், பாதுகாப்புத் தன்மை உள்ளிட்டவை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அமைப்பின் விதிப்படி இருக்க வேண்டும்.
எனவே, சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலேயே, இந்த ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவர்களிடமிருந்து மருந்துகளைப் பெற்று, அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இந்தக் குழு முடிவு செய்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாரோயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|