|
| தாய்க்கு உத்வேகமளிக்கும் சேயின் புன்னகை!
|
| நியூயார்க் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008 ( 15:11 IST ) | |
தன்னுடைய குழந்தையின் புன்னகையை காணும் தாய், பரவசத்தையும் உத்வேகத்தையும் அடைகிறாள்.
இதில், என்ன சந்தேகம்? குழந்தையின் புன்னகையைக் கண்டு தாய் பூரிப்படைவது தெரிந்தது தானே என்று கேட்கலாம்.
ஆனால், குழந்தையின் புன்னகையைக் காணும் தாய், உடல் ஆரோக்கிய ரீதியாக எத்தகைய பலன்களை அடைகிறாள் என்பதை புதிய மருத்துவ ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான ஆய்வில், முதல் குழந்தையை ஈன்ற 28 தாய்மார்களின் முன்பு அவர்களது குழந்தைகள் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அப்போது, அவர்கள் மீது எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டன.
சிரிக்கும் குழந்தைகளின் படங்களை பார்க்கும் அந்தத் தருணத்தில், தாய்மார்களின் மூளையிலுள்ள வேதிப் பொருளான 'டோபமைன்' மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவது கண்டறியப்பட்டது.
கற்றல், உந்து சக்தி, தூக்கம், உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகியவற்றுக்கு தகவல் அனுப்பும் வேதிப் பொருளே, 'டோபமைன்' ஆகும்.
தங்களது குழந்தை சோக நிலையில் இருப்பதைக் காணும்போது, அது தாய்மார்களுக்கு எதிர்வினையாகவே அமைகிறது.
அமெரிக்கன் மெடிக்கல் ஜர்னல் பேடியாட்டிக்கில், மேற்குறிப்பிட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|