|
| இந்தியாவில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடு! |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 14 ஜூன் 2008 ( 16:04 IST ) | |
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக இருந்து வருகிறது.
இதுகுறித்து சுகாதார சேவை தலைமை இயக்குனர் ஆர்.கே.ஸ்ரீனிவாசன் இன்று அளித்த பேட்டியில், "இந்தியாவில் ஆண்டுக்கு 50 லட்சம் யூனிட் இரத்தம் சேகரிக்கப்படுகிறது. இது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவையில் 60 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது" என்றார்.
மேலும், "இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வாயிலாக, இரத்த தானம் செய்ய விழைவோரின் எண்ணிக்கை மேலும் கூட்டும் விதமாக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறது" என்று கூறினார்.
இரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக நாடுகள் முழுவதும் இன்று (ஜூன் 14) இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
இரத்த தானம் : சில குறிப்புகள்
* இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
* சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் இரத்தம் இருக்கும். அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படும்.
* தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
* இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
* இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
* உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.
* இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.
* இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது.
* இரத்த தானம் செய்ய விரும்புவர்களுக்கு சர்க்கரை நோய், டிபி, எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது.
* இரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|