|
| தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ்! |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 11 ஜூன் 2008 ( 18:54 IST ) | |
தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார்.
நாட்டிலேயே முதன் முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, அரசு ஊழியரின் கணவர் அல்லது மனைவி, மகன், மகள் ஆகியோர் பயன் பெற தகுதியுடையவராகின்றனர்.
சிகிச்சைப் பெறும் அரசு ஊழியர்கள் தங்களுக்கான மருந்து செலவுகள், லெப்ராஸ்கோபிக் அல்லது திறந்த அறுவை சிகிச்சைச் செலவுகள், மருத்துவர்கள் மற்றும் உதவியாளர் தொடர்பான கட்டணங்கள், தங்கும் அறை கட்டணம், பரிசோதனைகள் மற்றும் உணவுக் கட்டணம் ஆகியவற்றை பெற முடியும்.
நான்கு ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு காலஅளவுக்கு ரூ.2 லட்சம் வரை அரசு ஊழியர் தனக்கு மட்டுமோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தோ எந்த செலவுமின்றி சிகிச்சைகள் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் மாதம் ரூ.25 வீதம் ஆண்டுக்கு ரூ.300 என அவரது 2008 ஜூன் மாத ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். ஒரு பணியாளருக்கு ஆண்டு காப்பீட்டுத் தொகையாக ரூ.495ம், 12.5 சதவீத சேவைவரியும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
இத்தொகையில் அரசு ஊழியர் தனது பங்காக மாதம் ரூ.25 வீதம் 12 மாதங்களுக்கு செலுத்தும் ரூ.300 போக, மீதத் தொகையாகிய 195 ரூபாயுடன், 12.5 சதவீத சேவை வரி முழுவதையும் தமிழக அரசே அரசுப் பணியாளர்களுக்காக காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏறத்தாழ 300 மருத்துவமனைகளில் 52 வகையான நோய்களுக்குச் சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் செய்து கொள்ள முடியும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|