யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
தாய்ப்பால் கொடுத்தால் கேன்சர் வராது!
நியூயார்க் (ஏஜென்சி ), வியாழக்கிழமை, 5 ஜூன் 2008   ( 15:13 IST )
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பு புற்றுநோய் வராது என்பது ஆய்வு மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தாய்ப்பால் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இதில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து குறைவு என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லூசிகாலஸ் என்பவர் கூறுகையில், "பெரும்பாலான பெண்கள் மார்பு புற்றுநோயிலிருந்து தங்களை தாங்களே காத்துக்கொள்ளும் இந்த எளிய பாதுகாப்பு முறை பற்றி அறியாமலேயே உள்ளனர்" என்றார்.

"குழந்தை பெற்ற தாய்மார்கள், குறைந்தது 6 மாத காலத்துக்காவது தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது குறித்து முடிவு செய்யலாம்.

இதன் மூலம், குழந்தைகள் அதிக குண்டாவதையும் தடுக்கலாம். இதுதவிர, குழந்தைகளும் பல்வேறு நோய்களில் சிக்காமல் தப்புவர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆய்வுபடி, மொத்தம் 1998 தாய்மார்களிடம் தாய்ப்பால் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இதில், 19 சதவீத பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பு புற்றுநோயை தவிர்க்க முடியும் என்பதை அறிந்துள்ளனர்.

தாய்ப்பால் கொடுத்தால், குழந்தைகள் அதிகம் குண்டாகாமல் ஆரோக்கியமாக இருப்பர் என்பதை 25 சதவீத பெண்கள் உணர்ந்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பள்ளி குழந்தைகளின் இதயநோய் சிகிச்சைக்கு ரூ.15 கோடி!
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்ஸ்
சென்னை :புற்றுநோயை கண்டுபிடிக்கும் நவீன ஸ்கேன்
'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க'
சென்னை ஜி.எச்.சில் விரைவில் கல்லீரல் மாற்று ஆபரேஷன்!
'மருத்துவர் மேற்பார்வையில் தடுப்பூசி போடுவதன் காரணம்?'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...