|
| பள்ளி குழந்தைகளின் இதயநோய் சிகிச்சைக்கு ரூ.15 கோடி! |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 4 ஜூன் 2008 ( 15:51 IST ) | |
பள்ளிக் குழந்தைகளின் இதயநோய் அறுவைச் சிகிச்சை திட்டத்துக்காக அரசு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியும், பொது சுகாதாரத் துறையும் இணைந்து, பள்ளி குழந்தைகளுக்கான இதயநோய் அறுவை சிகிச்சை என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளன.
இந்த திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 40 ஆயிரத்து 308 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இதயநோய் உள்ளதா என்பதை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நோயின் பாதிப்புகளை பொருத்து, மாணவ, மாணவிகள் 3 வகையாக பிரிக்கப்படுகின்றனர்.
இதில் மூடிய இதய அறுவை சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம், சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.70 ஆயிரம் ரூபாய் என நிதி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகள் தவிர, சென்னையில் 10, மதுரையில் 3, கோவையில் 4 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|