யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்ஸ்
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 3 ஜூன் 2008   ( 14:58 IST )
சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சுகாதாரத்தை பேணும் வகையில், மாணவிகளுக்கு இலவச நாப்கின்ஸ் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த கல்வி ஆண்டிலிருந்து இந்த திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 25 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதற்காக கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த பணி முடிந்ததும் 3 மாதங்களுக்கு பின்னர் நாப்கின்ஸ் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

மாணவிகளின் ஆரோக்கியத்தை காக்கும் வகையிலும், சுகாதாரத்தை பேணும் வகையிலும் அறிமுகப்படும் இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை :புற்றுநோயை கண்டுபிடிக்கும் நவீன ஸ்கேன்
'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க'
சென்னை ஜி.எச்.சில் விரைவில் கல்லீரல் மாற்று ஆபரேஷன்!
'மருத்துவர் மேற்பார்வையில் தடுப்பூசி போடுவதன் காரணம்?'
கோல்கத்தாவை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு
ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் தமிழகம் வருகை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...