|
| சென்னை :புற்றுநோயை கண்டுபிடிக்கும் நவீன ஸ்கேன் |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 2 ஜூன் 2008 ( 17:01 IST ) | |
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோயை குணமாக்க உதவும் நவீன சிடி ஸ்கேன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வரும் 6ம் தேதி தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா கூறியதாவது:
உடலில் எந்த இடத்தில் புற்றுநோய் இருந்தாலும் அதனை துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க உதவும் நவீன பி.இ.டி., சி.டி. ஸ்கேன் தமிழகத்திலேயே முதன் முறையாக அடையாறு புற்றுநோய் மருத்துமனையில் நிறுவப்படுகிறது.
இதன் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, தேவைப்படும் சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்த முடியும்.
உடலில் குடல், மார்பு, தலை, கழுத்து போன்ற பகுதிகளில் வரும் புற்றுநோய், மூளை பாதிப்புய், வலிப்பு நோய், இருதய நோய் போன்றவற்றையும் கண்டறிய முடியும்.
ரூ.30 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ஸ்கேன் மூலம், மூளை மற்றும் மார்பு பகுதியில் புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறிய ரூ.10 ஆயிரமும், உடல் முழுவதும் பரிசோதனை செய்ய ரூ.25 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|