|
| 'மருத்துவர் மேற்பார்வையில் தடுப்பூசி போடுவதன் காரணம்?' |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 29 மே 2008 ( 12:51 IST ) | |
மருத்துவர் ஒருவர் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்மையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு 4 குழந்தைகள் இறந்தன. அதையடுத்து, மருத்துவர்கள் மேற்பார்வையில் கடந்த 3 வாரங்களாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன.
கிராமங்களில் நடத்தப்படும் தடுப்பு ஊசி முகாம்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் ஒரு பிரிவினர் மாநிலத்தில் 1400 இடங்களில் மட்டுமே தடுப்பு ஊசி போடப்படுவதாக தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட 26 பேர் கொண்ட தொழில்ட்பக்குழு, மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பு ஊசி போடுவதை அங்கீகாரம் செய்துள்ளது.
மருத்துவர் மேற்பார்வையில் தடுப்பு ஊசி போடப்படும்போது, குழந்தைக்கு முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைகிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் 6 தடுப்பூசிக்கு மேல் போட வேண்டியுள்ளது. தட்டம்மை, பிசிஜி, மூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பு மருந்துகளை தனித்தனியே அவைகளுக்குண்டான கரைப்பானுடன் கரைக்கப்பட வேண்டும். இந்த கரைப்பான்களை தவறாக வேறு தடுப்பு மருந்தில் கலந்தாலோ அல்லது தவறான தடுப்பூசியை போட்டாலோ அபாயகரமான பின் விளைவுகள் உடனடியாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவது அவசியம். மருத்துவர் கண்காணிப்பில் முகாம்கள் நடத்துவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பின் விளைவுகள் ஏற்படுமானால் உடனடியாக மருத்துவரின் உதவியுடன் சிகிச்சையளிக்க இயலும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் முழு பாதுகாப்பு தேவை என்பதைக் கருத்தில் கொண்டு மருத்துவரின் மேற்பார்வையில் அரசு மருத்துவ நிலையங்களிலும், கிராமங்களிலும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த மாற்றம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மருத்துவர்கள் மேற்பார்வையில் தடுப்பூசி போடுவதை கிராம சுகாதார செவிலியர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். ஒரு சில சங்க நிர்வாகிகளின் தனிப்பட்ட வசதிகளைவிட குழந்தைகளின் நலனே மிகவும் முக்கியமாகும் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | | அரசாங்கம் | | நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'.
வழக்கம்போல்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|