யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
கோல்கத்தாவை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு
கோல்கத்தா (ஏஜென்சி), புதன்கிழமை, 28 மே 2008   ( 13:29 IST )
காற்று மாசுபாட்டில், தலைநகர் டெல்லியைக் காட்டிலும் கோல்கத்தா மோசமான நிலையில் இருக்கிறது. இதனால், அந்நகரில் நுரை‌‌யீ‌ர‌ல் பு‌ற்றுநோ‌‌யாலும், மார‌டை‌ப்பா‌லும் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

கோல்கத்தாவில் நுரையீரல் புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு 18 பேர் பலியாகின்றனர். இந்நோய் பாதிப்பால் டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு 13 பேர் பலியாவதாக, ‌சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌வி‌ஞ்ஞா‌னியு‌ம், சி‌த்தர‌ஞ்ச‌ன் தே‌சிய பு‌ற்றுநோ‌ய் ‌நிறுவன ஆலோச‌க‌ருமான டி‌விஷா ல‌ஹ‌ி‌ரி கூ‌றினார்.

இந்நிறுவனத்தால் 6 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், கோல்க‌த்தா‌வி‌ல் நுரை‌‌யீ‌ர‌ல் பு‌ற்றுநோ‌ய் பாதிப்பு மட்டுமின்றி, மாரடை‌ப்பா‌ல் உயிரிழப்பவர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையு‌ம் ‌துரிதமாக அதிகரித்து வருவது தெரியவருவதாக அவர் தெரிவித்தார்.

கோல்கத்தாவில் 10-ல் ஏழுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ப‌ல்வேறு வகையான சுவாச ‌பிர‌ச்‌சனைக‌‌ள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

மேலும், அந்நகரின் சாலையோர‌‌ ‌வியாபா‌ரிக‌ள், கடை உ‌ரிமையாள‌ர்க‌ள், போ‌க்குவர‌த்து காவ‌ல்துறை‌யின‌ர், ஆ‌ட்டோ ஓ‌ட்டுன‌ர்க‌ள், ‌ரிக் ஷா இழு‌ப்பவ‌ர்க‌ள் உள்பட சாலைக‌ளி‌ல் அ‌திக நேர‌ம் செல‌விடுபவ‌ர்க‌ள் அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படுவதாகவு‌ம் அந்த ஆ‌ய்‌வு கூறுகிறது.

குறிப்பாக, நுரை‌யீர‌ல் பு‌ற்றுநோயா‌‌ல் முதியவர்கள் பலியாக நேரிடும் நிலையில், குழந்தைகள் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனையால் அவதியுறும் சூழல் ஏற்படுவதாக ல‌ஹ‌ி‌ரி தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் தமிழகம் வருகை
இந்தியாவில் தைராய்டு நோயால் 4.2 கோடி பேர் பாதிப்பு
குண்டுக் குழந்தைகளால் கவலையுறும் சீன பெற்றோர்கள்!
குழந்தைகளின் நுரையீரல் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும்
சென்னை அருகே ரூ.250 கோடியில் எம்.டி. பூங்கா!
கர்ப்பிணிகளின் மன அழுத்தமும் ஆஸ்துமாவும்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அரசாங்கம்
நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'. வழக்கம்போல்...
சிலந்தி
குருவி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...