யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் தமிழகம் வருகை
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 27 மே 2008   ( 12:58 IST )
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசசார ரயிலான ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் இன்று தமிழகத்துக்கு வருகிறது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் வி.கே. சுப்புராஜ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு, சுற்றுலாத் துறை செயலாளர் வெ. இறையன்பு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 'ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரயில், கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி டெல்லியில் புறப்பட்டது.

இந்த ரயில் இன்று காட்பாடி ரயில் நிலையத்துக்கு வருகிறது. இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், ஜூலை 12 முதல் 21-ம் தேதி வரை ஒரு கட்டமாகவும் 48 நாட்கள் தமிழகம், புதுச்சேரியில் 19 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும்.

மொத்தம் 7 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயிலைப் பார்வையிட அனுமதி இலவசம். முதல் மூன்று பெட்டிகளில் எய்ட்ஸ் குறித்த கண்காட்சியும், நான்காவது பெட்டியில் ஆடிட்டோரியமும் உள்ளன. இந்த ஆடிட்டோரியத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவர்களுக்கென சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஐந்தாவது பெட்டியில் எய்ட்ஸ் பற்றிய இலவச ஆலோசனைகள் வழங்க 6 அறைகள் உள்ளன. ஏழாவது பெட்டியில் அலுவலகமும், உணவகமும் உள்ளன.

மொத்தம் 48 கலைஞர்களைக் கொண்ட 6 கலைக் குழுக்களும், சுமார் 100 தன்னர்வத் தொண்டர்களும் இந்த ரயில் பயணம் செய்கிறார்கள்.

ரயில் நிற்கும் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள்.

ராஜீவ் காந்தி பவுன்டேஷன், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், நேரு யுவகேந்திரா ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த 'ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்' திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர் என்று அவர்கள் கூறினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியாவில் தைராய்டு நோயால் 4.2 கோடி பேர் பாதிப்பு
குண்டுக் குழந்தைகளால் கவலையுறும் சீன பெற்றோர்கள்!
குழந்தைகளின் நுரையீரல் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும்
சென்னை அருகே ரூ.250 கோடியில் எம்.டி. பூங்கா!
கர்ப்பிணிகளின் மன அழுத்தமும் ஆஸ்துமாவும்!
காற்று மாசுபட்டால் ரத்தம் உறையும்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அரசாங்கம்
நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'. வழக்கம்போல்...
சிலந்தி
குருவி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...