|
| தரமான தடுப்பூசி: அன்புமணிக்கு தமிழக அரசு கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 15:16 IST ) | |
துருப்பிடித்த ஊசிக்கு பதிலாக தரமான ஊசிகளை அனுப்பும்படி மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணிக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் அன்புமணிக்கு எழுதியுள்ள கடிதம்:
கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய தானே செயலிழக்கும் ஊசிக்குழல்களில் சிலவை தரமற்றதாக உள்ளன. சில ஊசிகள் துருப்பிடித்துள்ளன. பலவற்றில் தூசு படிந்துள்ளது. இவை தடுப்பூசி போடுவதற்கு தகுதியற்றவைகளாக உள்ளன.
இதுகுறித்து கடந்த 9ம் தேதி மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறைக்கு ஊசிக் குழல்களின் மாதிரிகளோடு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் தட்டம்மை தடுப்பூசிக்கு 4 குழந்தைகள் பலியானதால் இந்த தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சில மாற்றங்களை இந்த அரசு செய்துள்ளது.
எனவே, இந்த ஊசிக்குழல்களை பயன்படுத்தினால் தடுப்பூசி திட்டம் மீண்டும் பாதிப்படையும். எதிர்மறையான விளைவுகளும் ஏற்படும். இதனால் இந்த ஊசி குழல்கள் பயன்படுத்தப்படுவது மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தரமான ஊசிக்குழல்களை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|