|
| காயங்களை குணப்படுத்தும் ஆக்சிஜன் சிகிச்சை! |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008 ( 17:54 IST ) | |
விபத்துகளில் உடல் உறுப்பு இழப்பை தவிர்க்கும் வகையில், காயங்களை குணப்படுத்தும் ஆக்சிஜன் சிகிச்சை என்ற புதிய சிகிச்சை முறை பிரபலமாகி வருகிறது.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு உடல் உறுப்புகள் சேதமடையும். சில நேரங்களில் ஊனமடையவோ அல்லது உடல் உறுப்புகளையே இழக்கவோ நேரிடலாம்.
இதை தவிர்க்கும் வகையில், 'உயர் அழுத்த ஆக்சிஜன் மருத்துவம்' என்ற புதிய சிகிச்சை முறை தற்போது பிரபலமாகி வருகிறது.
அதன்படி, நோயாளிக்கு ரத்தத்தில் சாதாரணமாக இருக்கும் அளவைவிட, 'ஹீமோகுளோபின்' மூலம் 10 மடங்கு ஆக்சிஜன் கூடுதலாக செலுத்தப்படுகிறது. இதனால் அதிக அழுத்தத்தில் அதிக அளவு ரத்தத்தில் செல்லும் ஆக்சிஜன், விபத்தில் சிதைந்த திசுக்களை சீராகி ஆழமான புண்களை குணமடைய செய்கிறது.
இதனால், ஊனமுடையும் நிலையில் உள்ள உறுப்புகளை உடனடியாக குணப்படுத்த முடியும். உடல் உறுப்புகள் இழப்பையும் கூட தடுக்க இயலும். இந்த சிகிச்சை முறையை பயன்படுத்தி மேலும் பல்வேறு நோய்களை குணமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், இன்னும் சில ஆண்டுகளில் 'உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை மருத்துவம்' மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|