|
| காது கேட்கும் திறன் குறைந்தால் கற்றல் திறனும் குறையும்! |
| சென்னை (ஏஜென்சி), 13 மே 2008 ( 14:53 IST ) | |
'டிஸ்லெக்ஸியா' என்னும் கற்றலில் குறைபாடு நோய், சமீபகாலமாக குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதையுமே தவறாகவோ அல்லது மிகவும் தாமதமாகவோ புரிந்துக் கொள்வார்கள்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, காது கேட்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கும் கற்றலில் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
காது கேட்கும் திறன் குறைவால், பிறர் பேசுவதை குழந்தைகளால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. இதனால் பதில் சொல்லும்போது வார்த்தை உச்சரிப்புகளில் தடுமாற்றம் ஏற்படும். இதன் காரணமாகவே, மற்ற குழந்தைகளுடன் சேர முடியாமல் தனித்திருக்கும் நிலை உருவாகிவிடும்.
காது கேட்கும் திறன் குறைந்த குழந்தைகளால், அதிகபட்சம் 4வது வகுப்பு மேல் படிக்க இயலாது. இதனால், அந்த குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படும்.
எனவே, குழந்தை பிறந்த ஒரு வயதுக்குள்ளேயே அதன் காது கேட்கும் திறனை பரிசோதிக்க வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.
இதன் மூலம் கற்றலில் குறைபாடு இல்லாத, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|