யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
பெண் சிசு கொலை தடுப்பு: வாசகங்கள் வரவேற்கப்படுகிறது
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 11:45 IST )
பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை உண்டாக்கும் நல்ல வாசகங்களை மக்களிடமிருந்து த‌மிழக அரசு வரவேற்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண் சிசு கொலை தடுப்புக்காக கருக்கலைப்பு முறைப்படுத்துதல் சட்டம், கருவுருதலுக்கு முன் பாலினத் தேர்வு தடைச் சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. குற்றம் செய்துள்ள பலர் இந்தச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனாலும் பெண் சிசு கலைப்பு, கொலை, பெண்களை புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பத்திரிகை, தொலை‌க்கா‌ட்‌சி, ரேடியோ, துண்டு பிரசுரம், விளம்பரப் பலகை உட்பட பல ஊடகங்கள் வழியாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.மேலும் இந்த பொருள் குறித்து மக்களிடையே போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பெண் கருக் கொலை பற்றிய கவர்ச்சியான வாசகங்களை விழிப்புணர்வுக்காக எழுதுவது வரவேற்கப்படுகிறது.

(ரத்த தானத்துக்காக, `உதிரம் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்'; குழந்தைத் தொழிலாளர்களுக்காக, `சிறார் வருமானம் பெற்றோருக்கு அவமானம்' போன்ற வாசகங்கள்).

இதில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த வாசகங்களுக்கு முறையாக முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசுக்கு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசுக்கு ரூ.500 மற்றும் 5 நபர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.தேர்வுக் குழுவினால் வாசகங்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். போட்டி வாசகங்கள் 30-‌ம் தேதி வரை பெறப்படும்.பரிசு பெற்றவர்களுக்கு தபால் மூலம் விவரம் தெரிவிக்கப்படும்.

வாசகங்களை தனியாக எழுதி, முத்திரையிடப்பட்ட உரைகளில், 'பெண் கருக்கொலை தடுப்பு போட்டி- மே 2008' என்று எழுதி அனுப்ப வேண்டும். இந்தக் கடித உரைகளை, `இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை (நிர்வாகப் பிரிவு 7), சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை 044-24321835 (எக்ஸ்டென்சன்-284) என்ற தொலைபே‌சி எ‌ண்‌ணி‌ல் கேட்கலாம் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பெண் சிசு பிறப்பு விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 974-ஆக இருந்தது. இந்த நிலை 1981-ம் ஆண்டு 967 ஆகவும், 1991-ம் ஆண்டு 948 ஆகவும், 2001-ம் ஆண்டு 942 ஆகவும் குறைந்துவிட்டது. பெண் சிசுவின் எண்ணிக்கை குறைவால், வருங்கால சமுதாயம் பாதிப்புக்கு உள்ளாகும். பல தீமைகள் ஏற்படும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு '108'-க்கு டயல் செய்யலாம்!
குழந்தைகளை புத்திசாலிகளாக்கும் தாய்ப்பால் : ஆய்வு
தமிழகத்தில் இ‌ந்த ஆ‌ண்டு 10 பு‌திய தடு‌ப்பூ‌சி அ‌றிமுக‌ம்
நிமோனியாவுக்கு பலியாகும் குழந்தைகள்!
கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
'தேசிய மதுபான கொள்கை : மத்திய அரசு பரிசீலனை'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace