|
| இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு '108'-க்கு டயல் செய்யலாம்! |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008 ( 12:52 IST ) | |
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அவசர கால சேவைகளை மேம்படுத்துவதற்கென, இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் எம்ரி நிறுவனத்துடன் அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்தி சேவைத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, மருத்துவம், தீ விபத்து மற்றும் காவல்துறை சம்பந்தமான அனைத்து அவசர தேவைகளுக்கும் கட்டணம் இல்லா தொலைபேசி தொடர்பு எண் 108 மூலம் இந்த மையத்தை மக்கள் 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியும்.
இந்த நிறுவனம் அவசரகால ஊர்திகளை முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் தொடங்கி, பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தபடவுள்ளதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ஆலோசனை வழங்க, மாநில அளவில் தலைமைச் செயலரைத் தலைவராகக் கொண்ட ஆலோசனைக் குழுவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|