|
| தமிழகத்தில் இந்த ஆண்டு 10 புதிய தடுப்பூசி அறிமுகம் |
| திருச்சி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 15:00 IST ) | |
தமிழகத்தில் இந்த ஆண்டில் பத்து தடுப்பூசி மருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் பத்மநாபன் கூறினார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தற்போது தடுப்பூசிகள் மருத்துவர்கள் மேற்பார்வையில் தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு போடப்படுகிறது என்றும், மூளை காய்ச்சலுக்கு ஜப்பான் நாட்டு புதிய தடுப்பூசி உள்பட 10 தடுப்பூசிகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன என்ற அவர், 365 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'அல்ட்ரா சவுண்ட் கேன்' நவீன கருவி பொருத்தப்படுகிறதாகவும், 385 சுகாதார நிலையங்களில் ரத்த பரிசோதனை கருவி வழங்கப்பட்டு, பிரசவத்தின் போது ரத்த அழுத்தம் துல்லியமாக கணக்கிடப்படுகிறதாகவும் கூறினார்.
தற்போது 114 புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் வரும்முன் காப்போம் திட்டத்தின்படி 62 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், இதில் 2 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், உணவு பழக்கம் மாற்றத்தால்தான், சர்க்கரை நோய் அதிகமாகிறது என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|