|
| கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? |
கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அக்னி நட்சத்திரத்தின் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. இதனால், இன்னும் 25 நாட்களுக்கு பகல் வேளையில் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாது.
இந்நிலையில், கோடை வெயிலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஸ்பைன் தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. அதன்படி;
* குழந்தைகளுக்கு அதிக நீர், இளநீர் போன்றவற்றை கொடுக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
* அதிக வெயில் காரணமாக மயங்கிவிழ நேரிட்டால், நல்ல காற்றோட்டமான இடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* அதிக வெப்பம் காரணமாக அம்மை, தோல் நோய் போன்றவை உருவாக அதிக வாய்ப்புண்டு. எனவே, இந்நோய் தாக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும்.
* இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பகல் நேரத்தில் வெளியே வரக்கூடாது.
* நீரில் உப்பு, சர்க்கரை போன்றவை கலந்து அடிக்கடி குடிக்க வேண்டும். தினமும் இருமுறை குளிப்பது அவசியம்.
* அசைவ உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|