யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
'தேசிய மதுபான கொள்கை : மத்திய அரசு பரிசீலனை'
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008   ( 13:42 IST )
மதுபானங்களால் உண்டாகும் தீமைகளை தடுக்கும் விதமாக, தேசிய மதுபான கொள்கையை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறினார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் மதுபானங்கள் உள்ள நிலையில், மாநில அரசுகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடன் கலந்துபேசி, தேசிய மதுபான கொள்கையை தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மது அருந்துவோருக்கான வயது வரம்பு குறைந்தது தொடர்பாக கவலை தெரிவித்த அவர் பொருளாதார, சமூக மற்றும் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியாதாக மதுபானங்கள் இருப்பதால், திரைப்பட நடிகர், நடிகைகள் எந்தவொரு மதுபான வகையையும் ஆதரிக்கும் நேரடியான அல்லது மறைமுகமான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மதுவை ஆதரித்து மறைமுக விளம்பரம் செய்யப்படுகிறது என்றும், இதனை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கவனத்துக்கு தாம் கொண்டு செல்லவிருப்பதாகவும் அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழகத்தில் மருத்துவ அதிகாரிகள் மேற்பார்வையில் தடுப்பூசி
தமிழகத்தில் மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசி போட உத்தரவு
மருந்து விலை 5% குறையும்: பஸ்வான்
உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நிச்சயம்
வைட்டமின் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள், உஷார்!
இடுப்பு அளவு அதிகரித்தால் ஆயுள் குறையும்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace