யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
தமிழகத்தில் மருத்துவ அதிகாரிகள் மேற்பார்வையில் தடுப்பூசி
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 13:42 IST )
தமிழகத்தில் மருத்துவ அதிகாரிகள் மேற்பார்வையில், குழந்தைகளுக்கு கிராம செவிலியர்கள் தடுப்பூசி போடுவார்கள் என்று பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் பி.பத்மநாபன் கூறியுள்ளார்.

தடுப்பூசி போடுவதற்கு கிராம செவிலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வெளியான தகவலை மறுத்துள்ள அவர்,
தடுப்பூசி போடும் திட்டத்தில் இருந்து கிராம செவிலியர்கள் நீக்கப்படவில்லை என்றும், மாறாக, மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில், அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடப்படும்போது அவசரத் தேவைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகே அவசர ஊர்திகள் நிறுத்தப்பட்டிருக்கும் என்ற அவர், ஊசி போட்டபின் ஒரு மணி நேரம் வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளை வைத்திருக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்த அவர், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் இறந்ததையடுத்து, தடுப்பூசி போடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழகத்தில் மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசி போட உத்தரவு
மருந்து விலை 5% குறையும்: பஸ்வான்
உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நிச்சயம்
வைட்டமின் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள், உஷார்!
இடுப்பு அளவு அதிகரித்தால் ஆயுள் குறையும்!
சென்னையில் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: டி.ஆர்.பாலு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace