|
| ஆரோக்கியமான அறிவாளி குழந்தைகள் வேண்டுமா...? |
| வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 13:14 IST ) | |
கருத்தரிப்புக்கு முன்னர் சத்தான உணவுகள் சாப்பிடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, அறிவாளியாகவும் இருப்பார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் ஆடம் வாட்கின்ஸ் பல்வேறு ஆய்வுகள் செய்து வந்தார். இந்த ஆய்வுகளுக்காக அவர் எலிகளை பயன்படுத்தினார்.
அதன்படி, ஒரு பெண் எலிக்கு புரதச்சத்துக் குறைவான உணவைக் கொடுத்தார். பிறகு, அந்த எலியை கருத்தரிக்க செய்தபோது பிறந்த குஞ்சுகள் வளர்ந்ததும் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்தது.
மற்றொரு பெண் எலிக்கு சத்தான உணவுகள் கொடுத்து, பின்னர் கருத்தரிக்க செய்தார். அதன் குஞ்சுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை உறுதி செய்தார்.
இதேபோன்றுதான், பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டு வந்தால், பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புத்திசாலியாகவும் இருக்கும்.
இதற்கு மாறாக, கருத்தரிப்புக் காலத்தில் பெண்கள் சத்துக்குறைவான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
புதுமணத் தம்பதிகளுக்கு அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் 'கல்யாண விருந்து' வைத்து சத்தான உணவுகள் பரிமாறுவதற்கான காரணம் இப்போது புரிந்திருக்குமே...!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|