யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
சென்னையில் ஸ்டெம் செல் வங்கி துவக்கம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2008   ( 16:23 IST )
சென்னையில் பொது ஸ்டெம் செல் வங்கியை ஜீவன் ரத்த வங்கி விரைவில் துவக்கவுள்ளது.

இதுகுறித்து ஜீவன் ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் சீனிவாசன், மருத்துவ இயக்குனர் சரண்யா நந்தகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மகப்பேறு மருத்துவமனைகளை பதிவு செய்து, அங்கு பிரசவத்தின் போது வீணாகும் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படும். பிறகு இந்த செல்களை பகுப்பாய்வு செய்து, சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த வங்கி செயல்படும்.

இந்த செல்கள் மூலம் ரத்தப் புற்றுநோய், தலசீமியா உள்பட 70 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

ஸ்டெம் செல்களை சேமித்துவைக்கும் வங்கி வரும் மார்ச் மாதத்துக்குள் தொடங்கப்படும். இந்த வங்கியில் 40 ஆயிரம் யூனிட் ஸ்டெம் செல்களை சேகரித்து வைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஜி.எச்.சில் கட்டண வார்டுகள் துவக்கம்
ராஜ்பவனில் பல் மருத்துவம்
ஜன.6-ல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது
சிக்குன் குன்யா : டிச.28-ல் கோச்சியில் பயிலரங்கம்
ஆயுர்வேதம்: பஞ்சாப்-புதுச்சேரி அமைச்சர்கள் ஆலோசனை
மருத்துவ வசதி: சென்னை முதலிடம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace