யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
பொதுவாக வயதான காலத்தில்தான் மூளை செயல்பாடு குறையக் கூடும்.ஆனால் இளம் வயதிலேயே அதாவது 25-30 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் மூளை செயல்பாடு குறைவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான 20 ஆயிரம் பேரிடம் அவர்களின் மூளை செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நினைவாற்றல், மூளைத் திறன், சரியான முறையில் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 7 ஆண்டுகள் வரை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதிர்களை கண்டறிதல், மூளை செயல்பாடு, கதைகளில் உள்ள வார்த்தகள் மற்றும் தகவல்களை நினைவு கூர்தல், அடையாளச் சின்னங்களை சேகரித்தல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சில திறன்கள் 20 வயது முதல் 30 வயதுக்குள்ளாகவே குறையத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

சுமார் 27 வயதுக்குள்ளாகவே புதிர்களுக்குத் தீர்வு காணும் திறன் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. 37 வயதில் நினைவாற்றல் ஏறக்குறைய அனைவருக்குமே குறையத் தொடங்கி விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

என்றாலும் எல்லா இளைஞர்களுமே மூளை செயல்பாடு இளம் வயதிலேயே குறையும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்கு வயதான காலத்திலும் மூளை அதிதீவிரமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

மொழி தொடர்பான வார்த்தைகள் மற்றும் பொது அறிவானது வயது அதிகரிக்கும் போது, கூடவே அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒருசில மனோரீதியான செயல்பாடுகள் 30 வயதிற்கு முன்பாக குறைந்த போதிலும், அறிவு வளர்ச்சி மேலும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரட் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்க...
உடல் சூட்டைத் தணிக்க..
இருமலை குணப்படுத்தும் தேன்!
மூளையின் சீரான இயக்கத்திற்கு...
ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?
ஜலதோஷத்தால் குழந்தைகள் அவதியா?
செய்திகள்
தேசியம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாகக் கூறி அவருக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காஞ்சிவரம் - விமர்சனம்
பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்...
1977 - விமர்சனம்
யாவரும் நலம் - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...
மேலும் படிக்க|மேலும்...