|
| மூளையின் சீரான இயக்கத்திற்கு... |
நாம் உறங்கும்போதும் கூட விழித்துக் கொண்டு 24 மணி நேரமும் தனது பணியை மூளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மூளையின் செயல்பாடு சீராக இருப்பது தான் நமது உடலுக்கு நல்லது.
மனித மூளை 1.5 கிலோ எடை கொண்டது. உடலின் அனைத்து இயக்கங்களும் மூளையின் உத்தரவுப்படியே நடக்கின்றன. நாம் சிந்திப்பது, பேசுவது, ஓடுவது, உண்பது, மகிழ்ச்சி, வருத்தம் என அனைத்தும் மூளையின் உத்தரப்படி தான் நடக்கிறது.
கரு உற்பத்தியான 2வது வாரத்தில் மூளை தோன்றிவிடுகிறது. 3 மாத கருவின் மொத்த எடையில் பாதி, மூளையின் எடையாக இருக்கும்.
உடலின் எந்தவொரு உறுப்பும் பாதிக்கப்பட்டால், மருத்துவம் மூலம் அதை குணப்படுத்துகிறோம். மூளையின் திறன் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். மூளை செயலிழந்துவிட்டால் இறப்பைத் தான் சந்திக்க வேண்டும்.
உடலின் மொத்த எடையில் 40-ல் ஒரு பங்குள்ள மூளைக்கு, உடலில் ஓடும் ரத்தத்தில் 5-ல் ஒரு பங்கு தேவைப்படுகிறது.
மூளையின் சீரான இயக்கத்திற்கு...
* புகை, மது, போதைப் பொருள் உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
* மன அழுத்தம், மனத் தொய்வு, தாழ்வு மனப்பான்மை, உற்சாகமின்மையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* இயற்கையான உணவுகளை உண்ண வேண்டும். செயற்கை உணவுகள், பாஸ்ட் புட், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை தொடவே வேண்டாம்.
* சர்க்கரையை கொழுப்புடன் கலந்து உண்ணக் கூடாது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கொழுப்பு அதிகமுள்ள பால், நெய், வெண்ணெய், முட்டை போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
* தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வதுடன் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வுடன் பேண முடியும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்து போட்டியிடுகிறது என்றும், நெல்லையில் தானும், சிவகங்கையில் ராதிகாவும் போட்டியிடுவதாகவும் அக்கட்சியின் தலைவர் சரத்... |
| |
|
|
|
|
 | | | 1977 - விமர்சனம் | | கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் பல வருட பழசு!... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன... |
| |
|
|
|
|
|
|