யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
குண்டாக இருப்பது ஆபத்தா?
அதிகமான உடல் எடையுடன் குண்டாக இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல வியாதிகளை எதிர்கொள்ள நேரிடுவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா?

பொதுவாக ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், குண்டாக இருப்பவர்கள் மேலும் குண்டாக விரும்பினால் ஆபத்து தான். இதுபற்றி நம்மிடம் விவரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் எஸ். அமுதக்குமார்.

Dr.S. AmuthaKumar
WD
பொதுவாக உடல் எடை அதிகமுள்ளவர்களுக்கு முதலில் வருவது சோம்பேறித்தனம். இதுவே பல நோய்கள் வருவதற்கும் காரணமாகிறது.

சர்க்கரை வியாதியில் தொடங்கி, ரத்தக் கொதிப்பு, இதய நோய், பக்க வாதம், சரும நோய், பித்தப்பையில் கல், புற்று நோய், கால் மூட்டு வலி, குடலிறக்கம் (ஹெர்னியா) என வியாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதிக எடையுடன் குண்டாக இருப்பதால் கால் பாதம் தட்டையாக மாறி, வேகமாக நடப்பதற்குக் கூட சிரப்பட வேண்டியிருக்கும். சிலருக்கு தாம்பத்ய வாழ்க்கை திருப்தியில்லாததற்கும் இது காரணமாக அமைந்து விடுகிறது.

உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, உணவின் அளவைக் குறைத்தல், சத்தான உணவுகள் உட்கொள்ளுதல் போன்றவற்றாலும், கடின வேலைகளை அதிகம் செய்வதாலும் இத்தகைய நோய்களில் இருந்து தப்ப முடியும்.

உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். கொழுப்பு, சர்க்கரை அதிகமுள்ள உணவைத் தவிருங்கள். உடல் உழைப்பை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப் பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். உடல் பருமனால் ஏற்படும் கோளாறுகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தலைமுடி உதிர்கிறதா?
பழங்களை புறக்கணிக்க வேண்டாம்...
கண்ணில் ஏதேனும் விழுந்துவிட்டால்...
புற்று நோயை தடுக்கும் சிப்ஸ்
திடீர் தலைவலியால் அவதியா?
'யானை'க்கால் நோயை பரப்பும் 'கொசு'க்கள்...
செய்திகள்
தமிழகம் - சென்னை உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் மற்றும் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ வளாகத்தில் உள்ள ‌நீ‌திம‌ன்ற‌ங்களைத் தவிர தமிழக‌த்‌தி‌ல் உள்ள அனைத்து கீழ் ‌நீ‌திம‌ன்ற‌ங்களும், தீர்ப்பாயங்களும் பிப்ரவரி 25 ‌ம் தே‌தி ( நாளை ) திறக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வெண்ணிலா கபடி குழு- விமர்சனம்
தமிழ் சினிமாவுக்கே உரித்தான வழக்கமான அடிதடி சண்டை, குத்தாட்டத்துடன் கூடிய பாடல் என இல்லாமல் மாறுபட்டு வெளி வந்துள்ளது, 'வெண்ணிலா கபடி குழு'...
'நான் கடவுள்' - விமர்சனம்
காதல்னா சும்மா இல்ல- விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள். அவற்றை ஒதுக்கித் தள்ளாமல் சாப்பிட வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...