|
| குழந்தைக்கு புட்டிப்பாலா? கவனம் தேவை |
குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்கள், சுகாதார விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் அது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
இன்றைய கால கட்டத்தில் குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதில் புட்டிப்பால் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.
அவ்வாறு புட்டிப் பால் கொடுக்கும்போது பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.
புட்டிப் பால் கொடுப்பதற்கு முன், குழந்தைக்கு புட்டிப் பால் குடிக்க நன்கு பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பது பற்றி தாய்மார்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. பால் மேலும் வேண்டுமென்றால் குழந்தை அழுது கேட்டுப் பெறும். வேண்டாம் என்றால் புட்டிப்பாலை குடிப்பதை நிறுத்திக் கொள்ளும்.
எப்போதும் தொடர்ந்து பாலை மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். எனவே போதுமான அளவு ஆறிய தண்ணீரையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
பால் ரப்பரையோ, பாட்டிலையோ தரமற்றதாக வாங்க வேண்டாம். அதனால் குழந்தைக்கு தேவையற்ற வயிற்று உபாதைகள் ஏற்படலாம். தரமானவற்றையே எப்போதும் பயன்படுத்தவும்.
பால் ஊற்றித் தரும் புட்டியை எப்போதும் தூயமையாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை பால் குடித்த பின்னரும் வெந்நீரில் கழுவி உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சிலர் பாட்டிலை சோப்பு நீரில் கழுவி, உலர்த்துவார்கள். சோப்பின் சில துகள்கள் பாட்டிலின் ஏதாவது ஒரு பகுதியில் ஒட்டியிருக்கலாம். எனவே கழுவிய பின்னர் வெந்நீரில் போட்டு அலசி எடுக்கவும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து அந்நாட்டு அரசுடன் விவாதிப்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் கொழும்பு செல்கிறார்... |
| |
|
|
|
|
 | | | பூ - விமர்சனம் | | பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - நம்மில் பெரும்பாலானோருக்கு தேநீர் அருந்தாமல் இருக்க முடியாது. அந்த நேரங்களில் பச்சைத் தேநீரைக் குடித்தால் இதய நோய் உங்களை அண்டாது... |
| |
|
|
|
|
|
|
|