யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
எலிக் காய்ச்சல் பரவுகிறது...உஷார்!
அண்மையில் கொட்டித் தீர்த்த கன மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளம். இதனால் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரால் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளன. கழிவு நீர் அதிகம் தேங்குவதால் எலிக் காய்ச்சலும் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

லிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

அதெல்லாம் சரி எலிக்காய்ச்சல் பரவுதை அதன் அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். இதுபற்றி சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பழனி கூறியதாவது:

பொதுவாக எலிக் காய்ச்சலுக்கான ஆரம்ப அறிகுறி தெரியத் தொடங்கினால் 3 நாட்களுக்குள் அதை குணப்படுத்தி விடலாம். தொடக்கத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் பலவீனமாகும். மஞ்சள் காமாலை கூட வரலாம். சிறுநீரகமும் பாதிப்படும்.

லிக் காய்ச்சலுக்கான ஆரம்ப அறிகுறிகள்:

எலிக் காய்ச்சல் தொற்று பரவிய நபருக்கு கண் எரிச்சலாக இருக்கும். மேலும் எலும்பு மூட்டுகளில் கடுமையாக வலி எடுக்கும்.

இத்துடன் முதுகு வலியால் அந்த நபர் அதிகம் அவதிப்பட நேரிடும். பசியின்மை ஏற்பட்டு, உடல் எடையும் குறையும். எப்போதும் உடல் சோர்வாகக் காணப்படும்.

இவ்வாறு மருத்துவர் பழனி தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உடல் நலனை பாதிக்கும் மன நலம்
தாய்ப்பால் அதிகம் சுரக்க..
மருத்துவ குணமுடைய பூண்டு
அதிகாலையில் மாரடைப்பு ஏன்?
வறட்டு இருமலால் அவதியா?
தீராத தலைவலியை தீர்க்க....
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...