|
| தாய்ப்பால் அதிகம் சுரக்க.. |
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அவசியம் தேவை. இத்தகைய தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.
பொதுவாக தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து புட்டிப் பால் கொடுக்கும் போக்கு இன்று அதிகரித்து வருகிறது. இதற்கு இன்றைய இளம் தாய்மார்கள் அதிகம் சொல்லும் சாக்கு ' தாய்ப்பால் சுரக்கவில்லை' என்பது தான்.
* வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
* தினமும் சுமார் 5 அல்லது 6 கப் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.
* அதிக புரத சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள், மீன் முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பேரீச்சம் பழம், திராட்சைப் பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயா பீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|