யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
தீராத தலைவலியை தீர்க்க....
தலைவலிக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. நமது உடல் பாகத்தில் எங்கோ ஓர் இடத்தில் கோளாறு என்பதன் அறிகுறிதான் தலைவலி.

தூக்கமின்மை, பசி, உடல் களைப்பு, இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, கண்பார்வையில் குறைபாடு போன்றவையாலும் தலைவலி ஏற்படலாம்.

சிலருக்கு காலையில் தூங்கி எழும்போது தலைவலி இருக்கும். வேறு சிலருக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகக் கூட தலைவலி நீடிக்கலாம்.

ஓர் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு பழகியவர்களுக்கு, ஏதாவது ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாவிட்டால், தலைவலி தலைதூக்கிவிடும்.

சிலருக்கு குளிர்பானம் குடித்தாலோ அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ ஒவ்வாமை ஏற்பட்டு தலைவலி தலைகாட்ட ஆரம்பித்துவிடும். தலைவலியின் வருகைக்கு இப்படி பல காரணங்கள் உண்டு.

தூக்கமின்மையால் உருவான தலைவலி என்று தெரியவந்தால், உடனடியாக நன்றாக தூங்கி எழுங்கள். சாப்பிடுவது தாமதமானதால் வந்த தலைவலி எனில், காலம் கடந்துவிட்டாலும் கூட சிறிதளவு சாப்பிட்டு முடித்து சிறிது ஓய்வெடுங்கள்.

கண்பார்வை குறைபாடு காரணத்தால் ஏற்பட்ட தலைவலி எனில், கண் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது.

இதையெல்லாம் தாண்டி, ஒரு நாளுக்கு மேல் தலைவலி நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நிரந்தர நிவாரணி.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இரவில் அசைவ உணவா? அறவே வேண்டாம்!
மழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
சைனசுக்கு புதிய முறை சிகிச்சை
ஆயுளை நீட்டிக்க... நடைப் பயிற்சியும், உணவுமுறையும்!
செல்போனால் ஆண்மைக்கு ஆபத்து!
சைவம் மட்டுமே சாப்பிட்டால் மூளை சுருங்கும்: ஆய்வு!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...