|
| மழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் |
மழைக் காலத்தில் அச்சுறுத்தும் பல்வேறு நோய்களில் டெங்கு காய்ச்சலும் ஒன்று. கொசுக்கள் மூலம் பரவும் இந்நோயிக்கான அறிகுறிகள், அதை தடுக்கும் முறைகளை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
டெங்கு காய்ச்சலானது வைரஸ் கிருமியால் பரவும் ஒருவகை நோய். கொசுக் கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் இதை பரப்புகின்றன.
டெங்குவின் அறிகுறிகள்:
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாக திடீரென காய்ச்சல் ஏற்படும். மேலும் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, வாந்தி, வயிறு வலி போன்றவையும் உண்டாகும்.
டெங்கு காய்ச்சலின்போது இருமல் மட்டும் வருவதே இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோய் தீவிரமடையும் போது மூக்கு, பல் ஈறு, தோலில் இருந்து ரத்தம் வடியும். பழுப்பு நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும்.
சிகிச்சை முறை:
டெங்கு காய்ச்சலுக்கு என்று பிரத்யேக மருத்துவம் கிடையாது. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு பயன்படாது. டெங்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.சிகிச்சையின் போது ஆஸ்பிரின் புரூபென் மருந்துகளை சாப்பிடக் கூடாது. இது ரத்தத் திட்டுகளை குறையச் செய்யும்.
டெங்கு பரவாமல் தவிர்ப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கொசுகளின் பெருக்கத்தை தடுக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தேங்கி இருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும். சுற்றுப் புறங்களையும், வீட்டையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். கொசு மருந்தை அவ்வப்போது தெளிக்க வேண்டும்.
சுத்தமே சுகாதாரமான வாழ்வு ஆதாரம் என்பதை மனதில் கொண்டால், டெங்குவில் இருந்து தப்பலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|