|
| சைனசுக்கு புதிய முறை சிகிச்சை |
சைனஸ் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சையின்றி 'பலூன் சைனு பிளாஸ்ட்டி' என்ற அதிநவீன சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சிகிச்சை முறையை விளக்கும் கருத்தரங்கு மெட்ராஸ் இ.என்.டி. ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 80 காது - மூக்கு - தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்களுக்கு புதிய முறை சிகிச்சை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நவீன சிகிச்சை குறித்து அமெரிக்க பேராசிரியர் ஹோவர்டு லெவின், டாக்டர்கள் மோகன் காமேஸ்வரன், எஸ். ரகுநந்தன், விஜய கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக எண்டோஸ்கோப்பி மூலம் சைனஸ் பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதைக் காட்டிலும் 'பலூன் சைனு பிளாஸ்ட்டி' முறை எளிதானது, பாதுகாப்பானது.
இந்த வகை சிகிச்சையில் கதீட்டர் குழாய் மூலம் சைனஸ் காற்று அறைகளில் துளைகளை ஏற்படுத்தி, பலூனைச் செலுத்தி காற்று செல்வதற்கு உள்ள நோய்த் தொற்று தடைகள் அகற்ற முடியும்.
இந்த சிகிச்சைக்கு ரூ.60,000 வரை செலவாகும். 4 மணி நேரத்தில் சிகிச்சை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|