|
| சைவம் மட்டுமே சாப்பிட்டால் மூளை சுருங்கும்: ஆய்வு! |
| மெல்போர்ன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2008 ( 16:00 IST ) | |
சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளை சுருங்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சைவம் மற்றும் அசைவ உணவுப் பிரியர்களிடம் ஓர் ஆய்வு நடத்தினர்.
61 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 107 முதியோர்களிடம் இநத ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் நினைவு மற்றும் உளவியல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது மூளை அளவும் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
இதில், அசைவப் பிரியர்களை விட, சைவப் பிரியர்களிடம் நினைவுத்திறன் குறைவாக இருப்பது தெரியவந்தது. சைவப் பிரியர்களின் மூளை அளவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது, உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான 'விட்டமின் பி-12' சத்தானது இறைச்சி, மீன், பால், முட்டை போன்றவற்றிலேயே அதிகளவில் உள்ளது.
இந்த சத்து காய்கறிகளில் போதிய அளவு இருப்பதில்லை. இந்த சத்து குறைபாடு காரணமாக, ரத்த சோகை, அழற்சி ஆகியவையும் ஏற்படுவது தெரிய வந்தது.
இதன் மூலம், முழு நேரமும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவோருக்கு மூளையின் அளவு சுருங்கி, நினைவாற்றலும் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|