|
| நலம் தரும் நடைப்பழக்கம்-தற்கொலை எண்ணத்தையும் போக்கும்! |
நடைப்பழக்கம்... மிக எளிதான விஷயம்தான் என்று நம்மில் பலரும் கருதுகிறோம்.
ஆனால், இதன் வல்லமை நம்மை வியக்க வைக்கக் கூடியவை என்பதை உணர்த்துகிறது, டாக்டர் எஸ்.அமுதகுமார் எழுதியுள்ள 'நலம் தரும் நடைப்பழக்கம்' என்ற புத்தகம்.
திமுக ராஜ்யசபை எம்.பி.யான கனிமொழியால் அண்மையில் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது முதல் நினைவாற்றலை அதிகப்படுத்துவது வரை என்று நடைப்பழக்கத்தின் 30 நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதேபோல் நடைப்பயிற்சியின் அவசியம், இதன் வகைகள், நடைப்பயிற்சிக்கு உதவும் கருவிகள், புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கான நடைப்பயிற்சி முறை, கண் பார்வையற்றோருக்கான பயிற்சி முறை என்று நடைப்பயிற்சியைப் பற்றி முழுமையாக விவரித்துள்ளார், டாக்டர் எஸ்.அமுதகுமார்.
தற்கொலை எண்ணத்தைக் கூட மாற்றக்கூடிய சக்தி, நடைப்பயிற்சிக்கு உண்டு என்றும் விவரிக்கும் இப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி:
"... மன விரக்தியால் தற்கொலைக்கு முயன்ற ஒருவர், தன் இறுதி முடிவை தனது நண்பரிடம் தொலைபேசியில் கூறியிருக்கிறார். நண்பரோ, "தாராளமாக செய்துகொள். உனது வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூங்காவில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்," என்றார்.
அந்நபரும் வேக வேகமாக பூங்காவை நோக்கி நடக்கிறார், நடக்கிறார், நடக்கிறார். பூங்கா வந்ததும் தற்கொலை எண்ணம் குறைகிறது.வேறு சிந்தனை வருகிறது.யோசித்தவாறே வீடுதிரும்புகிறார்.
இது, உண்மைச் சம்பவம்.எந்த விதமான தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தாலும் சரி... விரக்தி, தோல்வி, தற்கொலை எண்ணம் இருந்தாலும் சரி... மனதை மாற்றக்கூடிய மந்திர சக்தி, 'வாக்கிங்'கிற்கு உண்டு."
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|