யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
நினைவாற்றல் இழப்பைத் தவிர்க்க உடற்பயிற்சி செய்வீர்!
- தொகுப்பு : எஸ்.சரவணன்
வயோதிக பருவத்தில் நினைவாற்றலை இழந்து தவிப்பதைத் தவிர்ப்பதற்கு, அன்றாடம் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

இது, ஆஸ்திரேலிய மருத்துவர்களின் ஆய்வு ஒன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.

50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினைக் கொண்ட, நினைவாற்றல் பாதிப்புடன் வாழும் 138 ஆண்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களை மூன்று பிரிவினராக பிரித்து, உடற்பயிற்சிக்கான நேர அளவு ஒதுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வாரத்துக்கு 150 நிமிடங்கள் (மூன்று முறை 50 நிமிடங்கள்) உடற்பயிற்சி மேற்கொண்டவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பது தெரியவந்தது.

இதனால், தினமும் 20 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்வது சாலச் சிறந்தது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

மிகுந்த சிரமம் கொண்ட உடற்பயிற்சியினை மேற்கொள்ளாமல், நடைப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டாலே போதுமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அன்றாடம் உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதுமே, வயோதிக பருவத்தில் அல்ஸைமர் நோய் போன்ற நினைவாற்றல் குறைபாடு வரமால் தடுப்பதற்கு உரிய வழிமுறைகள் ஆகும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நீ‌ரழிவை குணமாக்கும் நாவ‌ற்பழ‌ம்!
ரத்தசோகையை குணமாக்கும் தாய்ப்பால்!
குறைமாதக் குழந்தையை தவிர்க்கலாம்!
வயதான தம்பதியரின் குழந்தைக்கு 'பைபோலார் குறைபாடு' ஆபத்து
மழலைகளிடம் முக மலர்ச்சி காட்டுதல் கட்டாயம்!
அன்றாட செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆரோக்கியமும்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...