யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
வயதான தம்பதியரின் குழந்தைக்கு 'பைபோலார் குறைபாடு' ஆபத்து
- தொகுப்பு : எஸ்.சரவணன்
வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்று மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

இதுவரையிலான ஆய்வுகளில், வயதான பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சிஸோஃபெரினியா மற்றும் ஆட்டிசம் போன்ற நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் வர வாய்ப்புள்ளது என்று அறிந்துள்ளோம்.

ஆனால், அண்மையில் ஸ்வீடனின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், 13,428 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், வயதான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பைபோலார் குறைபாடு வருவதற்கான சாத்தியம் மிகுதியாகவுள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 40 வயது கொண்ட பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு தொடங்கினாலும் கூட, 55 மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கே பைபோலார் குறைபாடு ஏற்படுவதற்கான ஆபத்து வலுவாகவுள்ளது.

20களில் உள்ள பெற்றோர்களைக் காட்டிலும், மேற்குறிப்பிட்ட வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த வகை பாதிப்பு வருவதற்கான சாத்தியம் 37 சதவிகிதம் அதிகம் என்கிறது ஆய்வு.

அதேநேரத்தில், வயதானோர் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இவ்வித பாதிப்புக்கு ஆளாவதற்கு, மரபு ரீதியான காரணங்களும் உண்டு என்று அம்மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே, வயதான தம்பதியர் உரிய மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனைகள் பெற்று செயல்பட வேண்டியது அவசியம்.

பைபோலார் குறைபாடு : ஓர் அறிமுகம்

நம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி மற்றும் துயரம் மிகுந்த உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, அவற்றை நமது கட்டுக்குள் வைத்தே வெளிக்கொண்ர்கிறோம்.

ஆனால், பைபோலார் குறைபாடு (மேனிக் டிப்ரஷன் என்றும் அழைக்கப்படும் - அதாவது, சித்தபிரமை மன அழுத்தம்) உள்ளவர்கள் தங்களது உணர்வுகளை மிகையான அளவில் வெளிப்படுத்துவர்; அதாவது, மகிழ்ச்சி என்றாலும் சரி, துயரம் என்றாலும் சரி, அவற்றை உச்சபட்சமாக வெளிப்படுத்துவர்.

தங்களது நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளை தாங்களாகவே கட்டுப்படுத்த முடியாத நிலை கொண்டவர்களே, பைபோலோர் குறைபாடு உடையவர்கள் ஆவர்.

இத்தகையோர் அன்றாட வாழ்க்கையில் சாதரணமாக செயல்பட்டாலும், சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலைக்குச் சென்றுவிடுவர். அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம்.

இந்த மனநல குறைபாடு உடையவர்களின் வாழ்நாள் முழுவதுமே பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். இதைக் கண்டறிந்து குணப்படுத்துதல் சற்று கடினமானது என்றாலும் கூட, சுற்றத்தாரின் செயல்பாடுகளால் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியம் உண்டு.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மழலைகளிடம் முக மலர்ச்சி காட்டுதல் கட்டாயம்!
அன்றாட செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆரோக்கியமும்!
மருந்தின் வீரியத்தை குறைக்கும் பழ ஜூஸ்!
சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்தும் இளநீர்!
இதய நோய்களுக்கு வழிவகுக்கும் பருமனும் நீரிழிவும்
முதுகுவலியை விரட்டுவோம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...