|
| அன்றாட செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆரோக்கியமும்! | |
குழந்தைகளின் ஆரோக்கியம் மேன்மையடைவதற்கு, அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதேநேரத்தில், 'டி.வி.யே பார்க்காதே', 'கம்ப்யூட்டரைத் தொடாதே', 'வயிறு முட்ட சாப்பிடு'... இப்படியெல்லாம் அதட்டுதல் அழகல்ல.
அன்றாடம் உடற்பயிற்சி செய்தலும், டி.வி. பார்ப்பது மற்றும் கம்ப்யூட்டர் முன்பு அமர்வது போன்றவற்றுக்காக குறைந்த நேரம் மட்டுமே செலவிடுவதும், சிறார்களின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்கிறது, ஒரு மருத்துவ ஆய்வு.
குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளையும், அவர்களது ஆரோக்கியத்தின் நிலையையும் குறித்து ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்த ஆய்வில், 7 முதல் 12 வயது வரையிலான மொத்தம் 709 சிறுவர், சிறுமியர் கண்காணிக்கப்பட்டனர்.
இதில், அன்றாடம் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு எளிய உடற்பயிற்சியும், கட்டுப்பாடுடன் குறைந்த அளவு மணி நேரம் மட்டுமே டி.வி. பார்த்தல் மற்றும் கம்யூட்டரில் வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவற்றில் ஈடுபடும் சிறார்களின் ஆரோக்கிய நிலை கண்காணித்து வரப்பட்டது.
அதேபோல், உடற்பயிற்சியினை செய்வதற்கு ஒரு மணி நேரம் கூட செலவிடாமல், அன்றாடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக டி.வி. முன்பு அமரும் சிறார்களும் கவனிக்கப்பட்டனர்.
இந்த இரு தரப்புக்கு இடையேயான ஆரோக்கிய நிலையை ஆய்வு செய்தலில், குறைந்த நேரம் உடற்பயிற்சி செய்து, அதிக நேரம் டி.வி. பார்க்கும் சிறார்களைக் காட்டிலும், உரிய நேரம் உடற்பயிற்சி செய்து, குறைந்த நேரம் மட்டுமே டி.வி. பார்க்கும் சிறார்களே ஆரோக்கியம் மிகுந்தவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படாமலும், டி.வி. பார்ப்பதில் அதிக சுதந்திரமும் பெறும் குழந்தைகள், மிக விரைவில் உடல் பருமன் அடைந்துவிடுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே, குழந்தைகள் டி.வி. பார்க்க அனுமதிப்பதில் கட்டுப்பாடும், அவர்கள் எளிய உடற்பயிற்சி செய்வதில் ஈடுபாடும் காட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டியது, ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|