|
| இதய நோய்களுக்கு வழிவகுக்கும் பருமனும் நீரிழிவும் | |
உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.
இதுதொடர்பான ஆய்வு ஒன்றினை, அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
மொத்தம் 3,400 நடுத்தர வயதினரை, 30 ஆண்டுகளாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே, இதய நோய்களுக்கும், பருமன் மற்றும் நீரிழிவு பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஆய்வுக்குட்பட்ட பெண்களில், சாதரணமான உடல் எடை மற்றும் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான சாத்தியமானது 34 சதவிகிதம் என்கிற நிலையில், இவ்விரு பிரச்சனையும் உள்ள பெண்களுக்கு இதய கோளாறுகள் ஏற்பட 80 சதவிகித வாய்ப்புள்ளது என்கிறது, அந்த ஆய்வு.
ஆண்களைப் பொருத்தவரை இந்த விகிதம், சாதாரண நபர்களுக்கு 65 சதவிகிதமாகவும், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயுள்ள ஆண்களுக்கு இதய கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதமாகவும் உள்ளது என்று தெரிய வருகிறது.
எனவே, உடல் பருமனாவதைத் தடுப்பதுடன், உரிய முறையில் நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துவதும் அவசியம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|