|
| 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' | |
கைக்குழந்தைகள் தூங்கும் நேரம் போக மற்ற தருணங்களில் குப்புறப் படுக்க வைக்க வேண்டும்.
மாறாக, குழந்தைகளை மல்லாக்கப் படுக்க வைப்பதால், அவற்றின் வளர்ச்சியின் வேகம் தடைபடுகிறது என்று அமெரிக்கன் பிசிக்கல் தெரபி சங்கத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தேசிய அளவில் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக அளவில் குப்புற கிடத்தப்படாத குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு, மூன்றில் ஒரு குழந்தைகளுக்கு இருந்துள்ளது.
அவசர யுகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மழலை கேரியர்கள், கார் இருக்கைகள் போன்றவற்றிலேயே நீண்ட நேரம் ஒரே நிலையில் கிடத்துகின்றனர். இது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
இவ்வாறு இல்லாமல், குழந்தைகள் நடக்கும் நிலைக்கு வரும் வரை, விழித்துக் கொண்டிருக்கும்போது வெவ்வேறு நிலைகளில் இருக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை குப்புறப் படுக்க வைப்பதே சாலச் சிறந்தது என்கிறது, அந்த ஆய்வு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|