|
| சிறுநீரகக் கற்களுக்கு வழிவகுக்கும் 'ஐஸ் டீ'யை தவிர்ப்பீர்! | |
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில், கோடைகாலத்தில் மட்டுமின்றி, குளிர் காலத்திலும் 'ஐஸ் டீ' பருகும் பழக்கத்துக்கு நம்மில் பலரும் ஆளாகிறோம்.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல மிகுதியாக ஐஸ் டீயை பருகுவது ஆபத்தினை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐஸ் டீயை அதிக அளவில் பருகுவது, மிகுந்த வலியைக் கொண்ட௦ சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான ஆபத்தை விளைவித்துவிடும் என்று அமெரிக்காவிலுள்ள லயோலா சிகாகோ ஸ்ட்ரிச் ஸ்கூல் ஆஃப் மெடிசனின் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ஜான் மில்னர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஐஸ் டீயை முழுமையாக தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தும் அவர், ஐஸ் டீயில் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு காரணமான ஆக்ஸ்லேட் என்ற வேதிப்பொருள் மிகுதியாக இருப்பதே காரணம் என்கிறார்.
பொதுவாக சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே, அதிக அளவிலான திரவ உணவுகளை உட்கொள்ளாததேயாகும்.
எனவே, அன்றாடம் போதுமான அளவுக்கு தண்ணீரைப் பருகுவதும் சாலச் சிறந்தது என்கின்றனர், மருத்துவர்கள்.
அத்துடன், ஆக்ஸ்லேட் வேதிப்பொருள் மிகுதியாகவுள்ள பசலைக் கீரை, சாக்லெட், கொட்டை பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|