யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்!
- தொகுப்பு : எஸ்.சரவணன்
இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்காவாய்ப்பு மிகுதியாகவுள்ளது.

தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிறுநீரகங்களை காப்பாற்ற...
டைப் 2 நீரிழிவு : மிகுதியான காய்கறிகள்; குறைந்த பழரசம்!
அடிக்கடி தலைவலியா...?
மூலநோய்க்கு முற்றுப்புள்ளி
இதயநோய் வராமல் தடுக்க உதவும் பச்சை தேயிலை!
தீராத இருமலா? இதோ தீர்வு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...