யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
தொலைக்காட்சியும் குழந்தையின் ஆரோக்கியமும்!
- எஸ்.சரவணன்
தொலைக்காட்சிக்கும், குழந்தைகளில் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவ்வப்போது மருத்துவர்கள் எடுத்துரைத்து வருகின்றனர்.

ஒருபுறம் தொலைக்காட்சியில் காண்கின்ற நிகழ்ச்சிகளின் பாதிப்பு காரணமாக, குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் பாதகமான நிலை உருவாகிறது என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், தொலைக்காட்சியைப் பார்க்கும் நேரத்துக்கும், குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் குழு ஒன்று.

4 முதல் 7 வரையிலான வயதினைக் கொண்ட 70 குழந்தைகளைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

தொலைக்காட்சியைப் பார்க்கும் நேரம் குறையக் குறைய, குழந்தைகளின் ஆரோக்கியம் மேன்மையுடன் இருப்பது, இந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது.

அதாவது, அதிக நேரம் தொலைக்காட்சிப் பார்க்கும் குழந்தைகள், எளிதில் குண்டாகிவிடுகின்றன. இதனால், பல உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

மேலும், தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், அதிக அளவில் நொறுக்குத் தீனிகளை உட்கொள்ள தூண்டுதலாய் அமைவதும், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பாதகம் ஏற்படுத்திவிடுகிறது.

இதனால், குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே தொலைக்காட்சிகளைக் காண பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பித்தத்தைப் போக்க எளிய 'மாதுளை' சிகிச்சை!
இரத்த சுத்திக்கு உதவும் கொத்தமல்லிக் கீரை
சிறுவர்கள் உடல் பருமனாகாமல் தடுக்க உப்பைக் குறைப்பீர்!
வறட்டு இருமலை விரட்ட...
சிறுநீரகங்களை பாதுகாப்போம்!
உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace