யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
நலம் காக்க 'கை சுத்தம்' அவசியம்!
- எஸ்.சரவணன்
துரித உணவு காலத்தில், நம்மில் பலர் அன்றாட செயல்களிலும் துரிதத்தைப் பின்பற்றுகிறோம். இதனால், முன் விளைவுகளும், பின் விளைவுகளும் உண்டாவதை மறந்துவிடுகிறோம்.

இதில், தலையாயதாக இருப்பது கழிவறையை உபயோகப்படுத்தும் முறை!

அலுவலகம், திரையரங்கம் மற்றும் இதர பொது இடங்களிலும் உள்ள கழிவறைக்குச் செல்லும்போது, சிறுநீர் கழித்துவிட்டு திரும்பும் பலர் 'கை' கழுவுவதை மறதியில் தவிர்த்துவிடுகின்றனர் (நண்பர்களோ, அன்னியர்களோ அருகில் இருந்தால் மறக்கவே மறக்காது!)

அதேநேரத்தில், மறவாமல் கை கழுவுவோரும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஆம், இத்தகைய தருணங்களில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் வியாதிகள் தொற்றிக் கொள்வதற்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே, சோப்பை பயன்படுத்திய பிறகு, கையை வெந்நீரால் கழுவுவது நன்மை பயக்கும். ஆனால், பொதுத் துண்டில் துடைப்பதையும் தவிர்க்க வேண்டும்; மாறாக, பேப்பர் நாப்கின்களைக் கொண்டு கையை துடைப்பது நல்லது.

பின்குறிப்பு : கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பொதுக்கழிவறையில் கை கழுவும் ஆண்களின் எண்ணிக்கை 66% என்றும், பெண்களின் எண்ணிக்கை 88% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸோ... ஆண்களைக் காட்டிலும் பெண்களின் கைகளே சுத்தமானது!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செதில், பொடுகை விரட்ட...
கர்ப்பிணிகள் அதிக தண்ணீர் பருக வேண்டியதன் அவசியம்
செல்பேசி உபயோகிப்போர் கவனத்திற்கு...
தீப்புண் தன்மைகள் பற்றி தெரியுமா?
வியக்கவைக்கும் மைக்ரோ சர்ஜரி
ஸ்கேன் செயல்படும் விதம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981 மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சத்தம் போடாதே
'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக...
மருதமலை
உற்சாகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace