|
| செல்பேசி உபயோகிப்போர் கவனத்திற்கு... | |
மனிதனின் பயன்பாட்டுக்காக அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்ந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், அத்தகைய சாதனங்களை உபயோகிப்பதால் ஏற்படும் உடலளவிலான பின்னடைவுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் அவ்வப்போது வெளியிட்டவண்ணம் இருப்பதைக் காணலாம்.
அந்த வகையில், நவீன உலகத்தில் மனிதனுக்கு செல்பேசி என்பது அன்றாட தேவைகளுள் ஒன்றானதாகக் கருதப்படும் இந்தச் சூழலில், இந்த தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுள் குறித்தும் அவ்வப்போது மருத்துவ ஆய்வுகள் வெளியானபடியாக உள்ளன.
அண்மையில், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்பேசியை உபயோகிப்போருக்கு (தினமும் அதிக நேரம் பேசிவோருக்கு) மூளையில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான சுவீடனைச் சேர்ந்த உமேயா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் விவரம் தொடர்பான கட்டுரை, 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதியிட்ட 'டெய்லி மெயில்' இதழில் வெளியாகியுள்ளது.
அதில், நாள்தோறும் செல்பேசியை நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்தினால், நரம்புகளை பாதுகாக்கும் மூளையில் உள்ள செல்கள் அழிந்து போகக்கூடும். இதனால், மூளையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகளவில் உள்ளது. அத்துடன் மூளையில் இருந்து காதை இணைக்கும் நரம்பில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கட்டியால் காது கேட்கும் தன்மையை இழந்துவிடும் அபாயம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறது அந்தக் கட்டுரை. ஆம், 'சிறு குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிக மெல்லிதாக இருக்கும். நரம்பு மண்டலம் முழு அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது. இதனால், செல்பேசியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கிறது' என்கின்றனர் சுவீடன் ஆய்வாளர்கள்.
இதனால், செல்பேசியை உபயோகிப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அதேநேரத்தில், மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
காரணம், உரிய மருத்துவர்களை அணுகி, உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் செல்பேசியை பயன்படுத்தும் முறைகளை அறிந்து செயல்பட்டாலே போதுமானது!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|