யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
ஆரோக்கியத்துடன் வாழ உதவும் எளிய உடற்பயிற்சிகள்!
- தொகுப்பு : எஸ்.சரவணன்
எவ்வித நோயுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு, மிகுந்த சிரத்தையுடன் கூடிய உடற்பயிற்சிகள் அவசியமில்லை என்றும், எளியமுறைப் பயிற்சிகளே போதுமானது என்றும் பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால், இரத்த அழுத்தம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் இருப்பதுடன், உடலும் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய பலனைப் பெற, வாரத்துக்கு 5 நாட்கள் நடைபயிற்சி செய்தாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதேநேரத்தில் வடக்கு அயர்லாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ இதழோ, 'வாரத்தில் மூன்று நாட்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது' என்கிறது.

மேலும், எளிய உடற்பயிற்சிகள் மூலம் இரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்ய முடியும் என்பதை, அண்மையில் மருத்துவ ஆய்வு ஒன்றின் வாயிலாக பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம் நிரூபித்துள்ளது.

எனவே, 'நேரமில்லை' என்ற நொண்டிச் சாக்கை சொல்வதை விட்டுவிட்டு, அன்றாடம் எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செய்வோமானால், நோய்களை அண்டவிடாமல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மகளிர் கவனத்திற்கு... அசைவ உணவுகள், இனிப்புகள் ஜாக்கிரதை!
மூளைக்காய்ச்சலை தடுக்கலாம்...
சிவப்பு பூ தரும் கறுப்பு கூந்தல்
பாம்பு கடித்தால்....
மலேரியா நோய் தாக்கினால்...
கம்ப்யூட்டர்கள் ஜாக்கிரதை!
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace