யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
மகளிர் கவனத்திற்கு... அசைவ உணவுகள், இனிப்புகள் ஜாக்கிரதை!
- தொகுப்பு : எஸ்.சரவணன்
செவ்வாய்கிழமை, 7 ஆகஸ்டு 2007   ( 16:56 IST )
அன்றாட உணவில் அசைவம் மற்றும் இனிப்புகளைச் சேர்த்துக்கொள்ளும் பெண்கள், மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்று மேற்குறிப்பிட இரண்டு வகை உணவுகளையும் அதிக அளவு உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான கூடுதல் வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் அன்றாட உணவில் அசைவ வகைகளைச் சேர்த்துக்கொள்வது அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக, கொழுப்புச் சத்து மிகுதியாவதால் மார்பகப் புற்றுநோய் வரும் அபாயத்துக்கு பெண்கள் ஆளாவதாகவும், இதில் 40 வயதைக் கடந்த பெண்களே அதிக அளவில் பாதிப்புக்குள்ளவதாகவும் நேர்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்தியாவில் மிகுதியாக அசைவம் உண்ணும் பழக்கம் குறைவாகக் காணப்படுவதால், இந்தியப் பெண்களுக்கு பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது.

அதேநேரத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் (1997-க்கு முன்) இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் பாதித்தப் பெண்களின் விகிதம், 1000 பேருக்கு 5 முதல் 8 ஆக இருந்தது.

ஆனால் இந்த விகிதம் தற்போது (2007), இரு மடங்ககாக உயர்ந்துள்ளது (1000-க்கு 12 பேர்) என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைக்கு, அளவுக்கு அதிகமாக அசைவ மற்றும் இனிப்பு வகை உணவுகளை உட்கொள்வதும் பிரதான காரணமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மூளைக்காய்ச்சலை தடுக்கலாம்...
சிவப்பு பூ தரும் கறுப்பு கூந்தல்
பாம்பு கடித்தால்....
மலேரியா நோய் தாக்கினால்...
கம்ப்யூட்டர்கள் ஜாக்கிரதை!
'ஊமை'த்தன்மை ஏற்படுவது ஏன்?
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace