|
| மாற்று மருத்துவமாக...ஹோமியோபதி | |
உடப்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். உடல் நலன் குறித்த அடிப்படை அம்சங்கள், வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பரவலான சில உபாதைகள், தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் என நாம் துவங்கிய சிறு நடைப் பயணம் நினைவிற்கு வருகிறது.
ஆங்கில மருத்துவமன்றி உள்ள இதர மருத்துவ முறைகளில் ஹோமியோபதி ஒரு சிறந்த மருத்துவ முறை. சிறிய காய்ச்சல் என்றாலும், ஆன்டிபயாடிக் எடுக்கும் ஆங்கில முறைக்கு மாற்றாக, ஹோமியோபதி நமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை வலுப்படுத்துகிறது.
நோயை எதிர்த்து மோதாமல், நோய் எதிர்ப்புத் தன்மையைக் கூட்டி நோயிலிருந்து உடலைக் காக்கிறது. உணவு முறையில் பத்தியமோ, மருந்துகளால் பக்க விளைவுவோ இல்லாத மருத்துவ முறை ஹோமியோபதி. இதற்கு அதிக அளவில் செலவிடத் தேவையில்லை.
ஹோமியோபதியில் எளிதில் உட்கொள்ளத் தக்கதுமான மருந்துகள் உள்ளன. அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டிய இடங்களில், ஹோமியோபதி சிறந்த துணைவன். நோய் தீவிரமாகுமுன்பே, ஆரம்ப அறிகுறிகளை வைத்தே மருந்து எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.
எந்த ஒரு பெரிய சிகிச்சையைத் தீர்மானிக்கு முன்பும், மாற்று மருத்துவ முறைகளை பரிசீலிப்பது, இரண்டாவது கருத்து கேட்பது சாலச் சிறந்தது. அதில் ஹோமியோபதி முக்கிய இடம் வகிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|