|
| வயிறு நலம் காத்து வாழ்க வளமுடன் | | - தொகுப்பு : கணேஷ மரியதாஸ் |
|
ஒரு மனிதனிதன் ஜீரண உறுப்புகள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளதோ அதைப் பொருத்துதான் அவனது ஒட்டு மொத்த அரோக்கியமும் அடங்கி இருக்கிறது. உடல் இயக்கத்தின் அடிப்படை ஆதாரம் வயிறு. கல்லீரல், பித்தப்பை, கணையம், குடல் போன்ற ஜீரண மண்டலத்தில் தான் உடலின் தேவைகேற்ப உணவு பதமாக்கப்பட்டு உயிர்ச் சத்தாக மாற்றப்படுகிறது.
உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் முனைப்பாகச் செயல்பட ஊட்டச் சத்து அவசியம். நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து ஊட்டச் சத்தை உறிஞ்சி பதமாக்கி ரத்தத்துடன் கலக்கும் பணி ஜீரண மண்டலத்தில் தான் நடைபெறுகிறது. வாயில் தொடங்கி ஆசண வாயில் முடிவதே ஜீரண மணலமாகும்.
இதில் உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், ஆசண வாய் என எல்லாமே ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் சாப்பிடும் உணவு முழுமையாக ஜீணரமாக்கப் பட்டு உயிர் சத்தாக மாறும். இதில் ஒன்றின் ஆரோக்கியம் குறைந்தாலும் பிரச்சனைதான். எனவே ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.
நமது முன்னோர் வகுத்த உணவு பழக்கவழக்கங்கள் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தன. ஆனால் வாழ்க்கை முறை மாற்றம், மேற்கத்திய உணவு முறை, புகை பழக்கம், பரபரப்பு, பதற்றம் ஆகியவற்றால் நமது ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
அதனால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வாய்ப் புண், அதிக அமில அரிப்பு, இரைப்பை, குடல் புண் ஆகியவற்றை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் புற்று நோய், மஞ்சள் காமலை நோய்கள், கல்லீரல் புற்று நோய், கல்லீரல் சுறுக்கம், கணைய நோய்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|