|
| நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம் |
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு.
சேனல் அதிபர் ராஜீவ் கிருஷ்ணாவுக்கு காலை பத்து மணிக்கு மிரட்டல் போன் வருகிறது.போன் செய்கிறவர் எஸ்.ஜே.சூர்யா. சரியாக பன்னிரெண்டு மணிக்கு அதாவது இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவரை கொன்றுவிடப் போவதாக கூறுகிறார் சூர்யா.
எதற்கு இந்த மிரட்டல்? சூர்யா யார்? அவர் ஏன் ராஜீவ் கிரூஷ்ணாவை மிரட்ட வேண்டும்?சொன்னபடி சூர்யா தனது சபதத்தை நிறைவேற்றினாரா? புத்திசாலித்தனமான திருப்பங்களுடன் பதில் சொல்கிறது படம்.
தனது வழக்கமான இரட்டை அர்த்தங்களை தவிர்த்து முரட்டு அவதாரம் எடுத்திருக்கிறார் சூர்யா.அடர்த்தியான மீசையுடன் அப்பாவியாக காண்டத்தை காட்டி ஷாயாலியை காதலிக்க சொல்லும் காட்சி எக்ஸ்சலண்ட்! சின்னதம்பி காதலனாக நடிப்பது சூர்யாவுக்கு இனிக்கிற சக்கரை. எமோஷன்..? சூர்யா நிறைய பழக வேண்டும்.
ஷாயாலி அழகாக இருக்கிறார்.கோபப்படச் சொன்னால் தலையை வெட்டி திருப்புகிறார், பயப்படச் சொன்னால் கண்ணை உருட்டுகிறார். திருமணத்துக்கு முதல் நாள் இரவு, உன்கூட தங்குறேனே என்று சூர்யாவிடம் கெஞ்சும் காட்சியில் கொஞ்சமாக நடித்திருக்கிறார்.
மந்திரிகளை பாக்கெட்டில் வைத்திருக்கும் பவர்ஃபுல் சேனல் அதிபராக ராஜீவ் கிருஷ்ணா.தனது சேனலில் காம்பியரிங் செய்யும் பெண்களை கட்டாயப்படுத்தி அனுபவிக்கும் சென்ஸ் மேனியாக்.அதற்காக ஷாயாலியை அடைய துப்பாக்கி, ஒரு டஜன் அடியாள்கள், போலீஸ் பட்டாளம், போன் டார்ச்சர் என அவர் கொடுக்கும் டார்ச்சர், ஓவர் டோஸ். கொசு அடிக்க கொத்து குண்டா?
ப்ளாஷ்பேக்கில் கோட்டைவிட்ட இயக்குனர், பழிவாங்கும் இரண்டு மணிநேர காட்சியில் பட்டை கிளப்புகிறார்.ராஜீவ் கிருஷ்ணாவின் சின்ன வீடு, கறுப்பு பணம் என ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி அவரது இமேஜை பதம்பார்க்கும் சூர்யாவின் ஐடியாக்களில் பளிச்சிடுகிறது சிக்ஸ்த்சென்ஸ்.
பீட்ஸா டெலிவரி பாயாக வில்லனின் இடத்துக்கே சூர்யா வரும் காட்சி திக்..திக்.. அமிர்தம் கடைந்து அதில் நாலு சொட்டு ஆலகாலம் சேர்த்த மாதிரி படத்தில் நான்கு பாடல்கள்.ஆக்சன் படத்துக்கு தேவையா இது?
வில்லன் யார், ஹீரோ யார், பழி வாங்குவதற்கான காரணம் என்ன என்பது தெரிந்த பிறகும் சட்டென்று சபதத்தை முடிக்காமல் சவ்வாக இழுப்பது மைனஸ்.
இரண்டே மணி நேரத்தில் எதிரியின் இமேஜை காலி செய்து அவனையும் காலி செய்வதுதான் படத்தின் பலம்.லாஜிக் உதைப்பதும் இந்த ஏரியாவில்தான்.இரண்டு மணி நேரத்தில் சூர்யா செய்யும் வேலைகளை இருபது நாட்களில் முடிப்பதுகூட கடினம்.
லாஜிக் மீறல் இருந்தாலும், புத்திசாலித்தனமான திரைக்கதை படத்தை ரசிக்க வைக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - முல்லைத் தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு வளையப் பகுதியில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை அருகே விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்றுவரும் கடும் மோதலால் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவை சங்க... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|