|
| நாளை நமதே - விமர்சனம் |
பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்.
கோடிகளின் அதிபதி தனது சொத்தில் ஒரு பங்கை, அதாவது ரூ. 1,200 கோடியை நன்கொடையாக தருகிறார். கலெக்டரிடம் பணத்தை தருகிறவர், அதனை நல்ல வழியில் செலவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்குவது இரண்டு பிச்சைக்காரர்களிடம். அட்ரா சக்கை அசத்தப் போறாங்க என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்தடுத்த குழப்பக் காட்சிகளால் தலையில் குட்டி உட்கார வைக்கிறார்கள்.
ரூ.1,200 கோடிகளை அள்ளி வழங்கும் கோடீஸ்வரராக ஆசிஷ் வித்யார்த்தி. தமிழ் சினிமாவில் இப்படியொரு தாராள கோடீஸ்வரரா? ஆச்சரியம் அடங்கும்முன், அவர் ஒரு ஃபிராடு என தெரிகிறது. அனாதை குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து கொள்ளையடிக்கும் குள்ள நரி. குட்டு வெளிப்படாமல் இருக்க அவர் கொளுத்துவது தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை; கொடூரம்.
பிச்சைக்காரர்களாக வரும் மணிவண்ணனும், பிரதீப்பும் படத்தின் முதுகெலும்பு. புதிய பொறுப்பு கிடைத்ததும் பொளந்து கட்டுகிறார்கள். மந்திரி ராஜன் பி.தேவை அவர்கள் கடத்தும் விதம் பரபரப்பு. நடுவில் வரும் சர்வானந்த், தனுஷா காதல் எபிசோட் படத்துக்கு பொருந்தாத ஆறாவது விரல்.
பாலியல் தொழிலாளியாக வரும் கிரண், கலெக்டராக வரும் கார்த்திகா, எம்.எஸ்.பாஸ்கர், சார்லி என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பித்திருக்கிறார்கள். நகரத்தின் நடுவில் சுரங்கம் போன்ற காதுல பூ சமாச்சாரங்கள் நிறைய.
வித்யார்த்தி யார் என்ற பிளாஷ்பேக்கும், அவர் காணாமல் போனதை சாதகமாக்கி அரசியல் லாபம் பெற நினைக்கும் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு ஆப்படிக்கும் மணிவண்ணன், பிரதீப் டீமும் படத்தின் டெம்போவுக்கு உதவியிருக்கிறார்கள்.
ஆரவாரமாக தொடங்கி, குழப்பத்தில் தொடர்ந்து, கொட்டாவியில் முடித்திருக்கிறார் வினயன். பரத்வாஜின் நல்ல இசையும் கதையின் குழப்பத்தில் அமுங்கிப் போனது பரிதாபம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
| கார்த்திக் அனிதா | | டாம் அண்ட் ஜெர்ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை.
கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?... |
| |
|
|
|
|
|
|